உபதேசம்

உபதேசம்


     ஸ்கூல் பஸ் வந்து நிற்கும் சத்தம் சத்யாவுக்கு தெளிவாகக் கேட்டது. இன்னும் சற்று நேரத்தில் பிரேம் மாடிப்படி ஏறி வந்து விடுவான். அவனை அழைத்து வர எப்போதுமே போக மாட்டாள் சத்யா. நாமே அவனை கூட்டிக் கொண்டு வந்தால் அவனுக்கு எப்போது துணிச்சல் வருவது என்ற எண்ணம் தான் காரணம் .பள்ளிக்கு அனுப்பும்போது நல்ல புத்திமதிகள் எல்லாம் சொல்லி அனுப்புவாள்.


     பஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்டது "அம்மா அம்மா " என்று கத்தியபடி ஓடி வந்த பிரேமை ஆச்சரியமாகப் பார்த்தாள் சத்யா .இப்படி எல்லாம் பரபரப்பாக ஓடி வர மாட்டானே! 


     "ஏண்டா இப்படி கத்திக்கிட்டு வர்ரே?"என்று கேட்ட சத்யாவிடம்

"அம்மா நம்ம வீட்டுக்கு பக்கத்திலே வேப்பமரம் இருக்குல்ல அங்கே ஒரு மணிபர்ஸ் நிறைய ரூபாய் நோட்டுங்களோட கீழே விழுந்து கிடக்குதும்மா" என்று மூச்சிரைக்கக் கூறினான் பிரேம்.


      "எந்த இடத்துலடா? சீக்கிரம் வந்து காட்டு.யாராவது பார்த்துடப் போறாங்க" என்று சொல்லிக் கொண்டே ஓடியவளின் பின்னாலேயே பிரேமும் ஓடினான்.

அவன் சுட்டிக் காட்டிய இடம் சுத்தமாக இருந்தது. அதற்குள் யார் கையிலேயோ கிடைத்து விட்டது 

போலிருக்கிறது.


      " பர்ஸைப் பார்த்தே இல்லே.. உடனே எடுத்துட்டு வர வேண்டியதுதானேடா.நாம இப்போ இருக்கிற கஷ்ட காலத்துக்கு ஏதோ கொஞ்சமாவது உதவி இருக்கும் இல்லே..நீ எல்லாம் எப்படித்தான் பிழைக்கப் போறியோ?" என்று கோபப்பட்டவளிடம் " "நீதானே அம்மா காலையில ஸ்கூலுக்குப் போகும் போது நமக்கு சொந்தமில்லாத எதையும் யார்கிட்டே இருந்து கிடைச்சாலும் சரி..எங்கே இருந்தாலும் சரி தொடக்கூடாதுன்னு என்கிட்ட சொல்லி அனுப்பினே"

என்றான் பிரேம் .


    திடுக்கிட்டுப் போன சத்யா 

கண் கலங்கியவாறு அவனை வாரி அணைத்துக் கொண்டாள் .



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%