மஞ்சள் பூசி வந்த
ஏஞ்சலே
ஊஞ்சல் ஆடாதடி
கெஞ்சலோடு
கால் பிடிக்கிறேன்
காதலியே
இன்னும் கொஞ்சம் காதலி
கால் பிடிப்பது
காதலில் பாவமல்ல
உன்னிடம் போர் செய்து தோற்பதும்
தர்மம் தான்
ஆடைகளுக்கெல்லாம்
விடுதலை தான்
விடையான தீர்வு
என் நோவுகெல்லாம்
உன் முத்தங்களே மருந்து
கெஞ்சி கேட்டாலும்
கொஞ்சி கேட்டாலும்
விட்டு விடாதே
வெறி பிடித்து
என்னை காதலோடு
வேட்டையாடு விளையாடு
காதலியே
நீ கடவுள் மட்டுமல்ல
என் கருணையற்ற
செல்ல சாத்தானும் நீ!
-லி.நௌஷாத் கான்-
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%