
பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தலைமையாசிரியர்மா. பழனி தலைமையில் நடைபெற்ற ஓசோன் தின நிகழ்வில்
சூரியனிடமிருந்து நமக்கும் பூமிக்கும் கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் சூரியனிடமிருந்து வரும் கதிர்வீச்சை வடிகட்டும் ஓசோன் படலம் பாதிப்படைந்துள்ளதால் அதிலிருந்து வெளிப்படும்
புற ஊதாக்கதிர்வீச்சு மூலமாக தோல் புற்றுநோய், கண் புரைநோய் போன்றவை உண்டாவதற்கு காரணமாக உள்ளன. ஓசோன் படலம் பாதிப்படைவதற்கு நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள்,குளிர்சாதன பெட்டிகள் போன்றவைகள் மூலம் வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன் ஓசோன் படலம் பாதிப்படைய காரணமாக இருக்கிறது.
இயற்கைக்கு மாறாக மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்இளங்கோவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மா. கல்பனா செய்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?