எங்களின் அருமை தெரியவில்லை

எங்களின் அருமை தெரியவில்லை


எருமை மாடே! எருமை மாடே! என்று எவரையும் திட்டாதீர்!


எருமை மாட்டின் பொறுமை பெரிது! எங்களை மறவாதீர்!


கருமை நிறத்தை கண்டதுமே வெறுப்பை உமிழாதீர்!


அருமை பெருமை எருமைக்குண்டு என்பதை மறவாதீர்!


மாட்டில்கூட நிறத்தைப் பார்ப்பீர்! மனிதர்கள் சரிதானா?


காட்டில் நாங்கள் பிறக்கவில்லை! கட்டிவைத்தீர் முறைதானா?


காளைமாட்டை காராம் பசுவை விழுந்து வணங்குகிறீர்!


நாளை ஒருநாள் எமக்கும் தோன்றும் வந்து வணங்கிடுவீர்!


நாங்களும் தானே பாலைப் பொழிந்தோம்

ஏனோ மறந்திடுவீர்!


நமனின் வாகனம் நாங்கள்தான் என்று ஓரமாய் ஒதுக்கிடுவீர்!


எருமைமாடே! எருமைமாடே! என்றெம்மை திட்டுகிறீர்!


சகதியில் புரண்டு திரிவதனாலே எங்களை வெறுப்பீரோ?


சாதியில் புரலும் மனம் படைத்தோரே.. எருமையை கேலி செய்வீர்!


தகுதியை அறியா மனிதர்களே! தவறுகள் புரியாதீர்!


மறுமை என்று ஒன்றுயிருந்தால்..

மனிதர்களாவோமே!


மரத்தில் கயிற்றில் மனிதரைக்கட்டி கசையடிக் கொடுப்போமே!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%