எழுதுகிற வரம் தா இறைவா.!

எழுதுகிற வரம் தா இறைவா.!


கழிவறையை கழுவு என்று சாென்ன போதும்..

கவிதை யொன்றை எழுதிக் கொண்டே வேலை செய்வேன்!

காசு பணம் எண்ணு என்று சொன்ன போதும் கருப்பொருளை மனதுக்குள் எண்ணிக் கொள்வேன்.!

 இழிவென்றும் உயர்வென்றும் எனக்குயில்லை.. எந்த நேரமும் கவிதை எழுதும் நேரம்! இமைமூடிப் படுக்கயிலும் கவிதைக் கனவு! எழுதுவதே எமக்குத்தொழில் இறைவா தருவாய்!


 சிறையினிலே அடைத்தாலும் சிந்து படிப்பேன்.! செக்கினிலேப் பிழிந்தாலும் கவிதைத் தருவேன்.! குறையொன்றும் இல்லையென நினைத்துக் கொண்டே.. குமுகாய விடுதலைக்குப் பாட்டுத் தருவேன்.!

விருது உனக்கு இல்லையென்று சொன்னால் கூட.. விலக்கி யென்னை மேடையேற்ற மறுத்தால் கூட.. பழுது எனக்கு இல்லையென்று சொல்லிக் கொண்பே.. பாட்டுக்குள் பாட்டாகக் கலந்தேயிருப்பேன்.!


காலமகள் அழைக்கும் வரை கவிதை தருவேன்! கால் கட்டிப் புதைக்கும் வரை கவிதை தருவேன்!

நாளைவரும் இன்றுவந்தால்கூட ஏற்று

நாளெல்லாம் பொழுதெல்லாம் கவிதை தருவேன்.!


எழுதுகின்ற வரம் ஒன்று தந்தால் போதும்.. என் ஈசா.. உன்னருளை நினைத்துக் கொண்டே

பழுதில்லா பாதையெல்லாம் எழுதி வைப்பேன்.. ! பாட்டுக்குள் என்னுயிரை எடுத்து வைப்பேன்.!

*வே.கல்யாணகுமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%