மனம் மட்டும் ஒன்று தானா

மனம் மட்டும் ஒன்று தானா



   " முழு நிலவைப்

     பார்த்தேன்

     அழகு பெண்ணையும்

     பார்த்தேன் ..."


     கொட்டித் தீர்த்து

     விட்டது நிஜ

     மழை அல்ல

     என் கவிதை

     வரிகள் ....."


     அவள் முகத்தில்

     தெரிந்த வேதனை

     சுருக்கங்கள்

     என் கவிதையிலும்

     பிரதிபலித்தது வலியாய்..."


     அவள் மலர்ந்த

     புத்துணர்ச்சி முகம்

     கண்ட போது

     என் கவிதையிலும்

     பேரானந்தம் தெரிந்தது .... "


     அவள் கூந்தல்

     நடை உடை

     அலங்காரம் ஆபரணம்

     எதுவும் என்னை

     புரட்டவில்லை

     அவளின் மாய

     முகம் ஈர்த்து

     சாய்த்தது .... "


     அவளின் வாடிய

      முகம் பார்க்கும்

      போது என் 

      நினைவுகள் அலை

      மீது அலையாய்

      அடித்து ஓய்கிறது ...."


      இது கனவின்

      எதிரொலியா

      காதல் சங்கீதமா

      தேடலின் பாதிப்பா

      இயற்கையின் சீண்டலா .... "


      சுகமும் வேதனையும்

      இரு பக்கமாய்

      கரையும் போது

       என் மனம் மட்டும்

      ஒன்று மட்டும்

      தானே ஏனோ ...?"


   - சீர்காழி. ஆர். சீதாராமன் .

     9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%