
இயற்கையைக்
காத்திட்டால்
இத்தேசம் மிளிரும்?
அயற்கையை
எதிர்பார்த்து
வாழ்ந்திட்டால்
உயர்வுகள் மறையும்
முன்னேற்றம் முடங்கும்!
எல்லாம் உண்டிங்கு
மக்களிடம் மட்டும்
எண்ணமில்லை உழைக்க!
அடுத்தவர் ஆதரவையே
நம்பிடும் கரங்களில்
அடுத்தடுத்து
தோல்விகளே
அணிவகுத்து நிற்கும்!
இந்நாட்டு
வரலாற்றை
இளையோரே
எழுதுங்கள்!
இலக்கியந் தொட்டு
விஞ்ஞானம் வரை
எங்கும் மேன்மை
எதிலும் ஆளுமை!
சுயநலமே இல்லாத
தலைவர்கள் மீட்டிடுத்த
சுதந்திர பூமியிது
அமைதிப் பூங்காவிது!
அண்ணலின் அகிம்சையை
அவனியில் விதைத்து
திண்ணமான எண்ணங்களை
தெளிவாக்குவோம் உலகிற்கு!
முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%