
०००
(1)
தனக்கு இடரெனில் கடிக்கும்
நசுக்கிட இறந்து போகும்
கடித்த வலி நீடிக்கும்.
(2)
வலிமையானது சிங்கம்
வலிமையானது எறும்பும்
அதனதன் வாழ்வில்.
(3)
எறும்பைவிடச் சிறிது
அதன் இதயம்
உணர்வே எதிலும் பெரிது.
(4)
உழைப்பின் மேன்மை எறும்புகள்
உழைத்து உண்பது பெருமை
மற்றவை சிறுமை.
(5)
எறும்புகளுக்கு வரலாறு ண்டு
வரலாற்றிற்காக வாழ்வதில்லை
வரலாறு போல வாழ்கின்றன.
(6)
உணவின் அவசியம் அறிந்தவை
தேடலின் துல்லியம் கற்றவை
இரண்டும் இருப்பின் சாதனை.
(7)
சேர்ந்தே போகின்றன
ஒற்றுமை மட்டுமன்று
இனத்தின் அடையாளமும்.
(8)
கடலுக்கு அருகிலும்
சாரைசாரையாய் எறும்புகள்
தங்களுக்காகவே.
(9)
எறும்பு உண்பதைக் காண ஆசையுண்டு
ஊட்டிவிட வேண்டும்.
(10)
சாரையாய் போகையில்
எறும்பு பாம்பாகிறது
ஒற்றையில் எழுத்தாகிறது.
ஹரணி
தஞ்சாவூர்- 2
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?