எண்ணத்தில் நலமிருந்தால்

எண்ணத்தில் நலமிருந்தால்


அன்பால் அனைவரும்

இணைந்திட வேண்டும்//


பண்பால் உயர்ந்து

பண்பட்டு வாழணும்//


சிந்தனைகள் சிகரத்தை

எளிதாய் எட்டிடணும்//


வந்தனை மூத்தோர்க்கு

செய்தே நிமிர்ந்திடணும்//


பெரிதான ஆசைகளை

நீரூற்றி வளர்க்கணும்//


அரிதாய் ஓர்நாள்

அவைகளும் மலர்ந்திடும்//


நம்மால் முடியாதென

எண்ணுதல் பிற்போக்கு//


சாதித்தே தீருவோமென

எழுவதே முற்போக்கு//


தோல்வி என்பதோர்

முடக்கமல்ல பயிற்சி//


வெற்றியின் விலாசம்

தொட்டிடும் முயற்சி//


அவனியை புரட்டிடும்

ஆற்றலைக் காண்பி//


அறிவியல் ஆக்கத்தின்

அதீதத்தை விசாலமாக்கு//


விஞ்ஞான விளிம்பில்

வியப்பினைப் பயிரிடு//


வருங்கால வீதியில்

வளர்ச்சியை விதைத்திடு//


மலைக்கு ஆசைப்படு

மண்புழுவாய் வாழாதே//


விழிப்புணர்வுப் பாதையில்

விரைந்து பயணித்திடு//


வழுக்கிடும் சட்டங்களைக்

கூராக்கி நகர்ந்திடு//


வலுவான கோட்பாட்டை

வாரிசுகளுக்குக் கற்றுக்கொடு//


ஓய்ந்தே சாயாதே

பந்தைய வாழ்க்கையிதில்//


பாய்ந்தே வென்றிடு

பராக்கிரமக் களத்திலே//



முகில் தினகரன்,

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%