நண்பரின் மகள் திருமணத்திற்காக, திருமண மண்டபத்திற்குள்
நுழைந்த கதிரேசனை வரவேற்க, அவருடைய நண்பர் வீட்டார் யாரும் வாசலில் நிற்கவில்லை. அப்படியே திகைத்துப் போய் நின்ற கதிரேசன்
கோபத்துடன் மண்டபத்திலிருந்து வெளியேற நினைத்தபடி வாசலை நோக்கி நடந்தார்.
அப்போது கதிரேசனின் உறவினர் கந்தசாமியும், இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். கதிரேசனைப் பார்த்து
மணமக்களை பார்த்து விட்டீர்களா? என்று கேட்க, திருமணத்திற்கு வருகிறவர்களை வரவேற்பதற்கு மணவீட்டார் யாருமே வாசலில் இல்லை.
நாம் எதற்காக திருமணத்திற்கு போகவேண்டும் என்று கந்தசாமியை ப் பார்த்து ஆவேசமாக பேசினார்.
சார்...என்னா சொல்றீங்க? மண்டப வாசல்ல வரவேற்கத்தான் மூன்று பெண்கள் நிக்கிறாங்களே! நீங்க பார்க்கலியா? இப்பல்லாம் திருமண மண்டபத்திலே திருமண வீட்டுக்காரங்க யாரும் நின்னு வரவேற்கறதில்லை. வரவேற்பு செய்யறதுக்குன்னு சம்பளத்துக்கு ஆள் வச்சிடறாங்க! அதுபோல சாவு வீட்டுல அழுவதற்குக்கூட கூலிக்கு ஆளுங்கள வச்சுக்கிற நிலை உருவாகிட்டுது!
இது மட்டுமல்ல....கோவில்ல சுவாமியை தூக்கறதுக்கும், சுடுகாட்டுக்கு பிணத்தை கொண்டு போறதுக்குமே கூலி ஆளை தேடற நிலைமை வந்துடுச்சு! அரசியல் கூட்டத்துல கலந்துக்கிறதுக்குக் கூட
கூலி கொடுத்து கூட்டம் சேர்க்குற மாதிரி ஆயிடுச்சு!
என்னா பண்றது? மனுசங்க கிட்ட இருந்த பந்தபாசம், உறவு நட்பு எல்லாமே அடியோடு அழிஞ்சு போயிகிட்டிருக்கு! என்று வருத்தமாக பேசினார் கதிரேசன்.
அது ஒரு பக்கம் இருந்தாலும், மனுசங்களுக்கு இப்ப மதிப்பு இல்லாம போயிடுச்சு! எல்லாமே பணமா மாறிப் போச்சு! என்று கவலைப் பட்டுக் கொண்டார் கந்தசாமி....!
+++++++++++++++++++++-
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?