ஏய்த்துப் பிழைக்காதே

ஏய்த்துப் பிழைக்காதே


அறுசீர் மண்டிலம்.


ஏமாறா தேநீ

என்றும்

எவரையுமே ஏமாற்

றாதே!

சீமானாய் வாழ்ந்தி

டாதே

சீர்வாழ்வே போது

மன்றோ!

தீமைகளைச் செய்தி

டாதே

தேர்ந்தநல்ல வாழ்க்கை

வாழு!

சாமான்ய னாக

இருப்பாய்

சரித்திரத்தில் நிலைப்பாய்

நீயே!


விரும்பாதே பிறரின்

சொத்தை

விழையாதே பிறரின்

மனையை!

கரும்பாகச் சுவைத்தே

வாழு

கனிவான சொல்லைப்

பேசு!

இரும்பான உள்ளம்

வேண்டாம்

ஈடில்லா அறத்தைப்

புரிவாய்!

உருப்படியாய் ஒருவே

லைசெய்

ஒருவரையும் ஏமாற்

றாதே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை,

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%