வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 15 10.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 15 10.25



தமிழ் நாடு இ பேப்பரின் தொடக்கக் கால வாசக சொந்தம் 

திரு.கோபால் அவர்கள், தென்காசி திரு.வெங்கடாசலபதிஅவர்களை அலைபேசியில் அழைத்துப் பேசியதை 

நேற்றைய வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தது, வெகு ஜோராக இருந்தது.


இந்திய கலாச்சார பெருமையைப் போற்றும் வகையில்,

உழைப்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் 

படைப்பாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், சமூக அவலங்கள் குறித்த விழிப்புணர்வு ஓங்கும் வகையில் அற்புதமான 

இயக்கத்துடன் வெற்றிகரமாக பயணித்து வரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் உண்மைத் தன்மையை உள்ளபடி 

உணர்ந்து உவகை அடைந்து, உலகத்தார் அனைவருக்கும் உரத்து ஒலித்து, வெளிச்சப் படுத்தி வரும் வாசக உள்ளங்களுக்கு இந்த தருணத்தில் பெருமையோடு நன்றி கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.


இங்கே எத்தனையோ மின்னிதழ்கள் சிறகடித்துப் பறந்து வந்தாலும், தமிழ் நாடு இ பேப்பரின் தரமும் தன்மையும் தனித்துவம் மிக்கதாக மிளிர்ந்து, ஜொலித்து 

லட்சக்கணக்கான வாசக உள்ளங்களில் 

தனி இடம் பிடித்து வரலாறு படைத்திருக்கிறது என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும்.


நான் அடிக்கடி கூறுவது போல்,

நமது வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இது 

கிடைத்தற்கரிய அருமையான சத்சங்கம். இந்த சங்கமத்தின் மூலம் 

ஆக்கப்பூர்வமான பல காரியங்களை இங்கே 

அரங்கேற்றி சாதனைகள் படைக்கலாம். புதுப்புது

சரித்திரம் நிகழ்த்தலாம்.

நம்பிக்கை தான் மிக மிக முக்கியம்.


ஒரு இ பேப்பருக்கு 

இத்தனை பில்ட் அப்பா 

என்று கூட சிலர் அவசரப்பட்டு ஆழம் உணராமல் கேட்கலாம். தப்பில்லை. அவரவர் பார்வையில் அவரவர் 

காரியம் நியாயமானதே!


பத்தோடு பதினொன்றாக இல்லாமல், பார்வையின் வீச்சை 

விரிவுப் படுத்தினால்,

விசாலப் படுத்தினால்,

இதயங்களை ஈரப் படுத்தினால், புத்தம் புது சிந்தனைகள், சக்திகள் விஸ்வரூபம் எடுக்கும். வியத்தகு உலகில் நாம் எதிர் கொண்டு நுகரும் அனைத்துமே,நல் அமுதமாக மாறும்..


இவ்வளவு விவரித்து மீண்டும் மீண்டும் உரைப்பதற்கு உன்னதமான காரணம் 

உண்டு என்று உணரும் மாத்திரத்தில் 

மகா மகா மாற்றங்கள் 

மந்திரம் போல் மனதில் ஊற்றெடுக்கும்.


அன்பான வாசக சொந்தங்களே!

தயவு செய்து இதை அலட்சியப் படுத்தாமல் ஆழ்ந்து யோசியுங்கள்.

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மறுக்க முடியாத மாபெரும் சக்தியாக உங்களை முதலில் உணருங்கள்.

அற்புதங்களை படைத்து அதிசயங்களை நிகழ்த்தி புதிய வரலாறு படைப்போம்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%