இந்த கிராமம் எங்கே?
இயற்கை அழகு எங்கே?
இன்று எங்கு என்று தேடினோமே..
அந்த நதியும் எங்கே..
வறண்டு போனதென்றே
தாகம் தீர்த்த நதியை இங்கு தேடினோமே..!
பழங்கள் தந்த மரத்தை
பலகையாக அறுத்து..சந்தைக் கூடம் தன்னில் விற்கிறோமே!
நிழல்கள் இன்றி சாலை. நெருப்பில் கால்கள் பதிய.. முட்கள் நிறைந்த பாதை நடக்கின்றோமே!
பச்சைக்கிளிகள் எங்கே?
பறவையினங்கள் தங்க
மரங்கள் இன்றி காட்டை
அழிக்கின்றோமே!
இயற்கை வாழ்வை தொலைத்து.. செயற்கையாகச் சிரித்து வாழ்கின்றோமே..
பசுமை நிறைந்த மலைகள்.. பாதையெங்கும் மரங்கள். நதிகள் காண கண்கள் ஏங்கயிலே..
மனிதன் கையில் உலகம்.. இயற்கை யோடு ஒன்றி.. இணைந்திடாமல் இங்கே தவிக்கின்றோமே!
காடு வயல்கள் கழனி.. மாடு மனைகள் கிராமம்
நாடு போற்ற வாழ்ந்த காலம் நினைக்கின்றோமே!
இன்று இவற்றை மீட்க.. இயற்கை பாதுகாக்க.. இனியும் காலமில்லை.. உடனே செயல்படுவோமே.!
*வே.கல்யாண்குமார்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?