ஒளிந்திடும் நிழல்.

ஒளிந்திடும் நிழல்.

அன்புள்ள ஆசிரியருக்கு,

என் ஆக்கத்தில் உருவான இக்கவிதையை உங்கள் இதழில் வெளியிட வேண்டுகிறேன்.


ஒளிந்திடும் நிழல்.


உச்சி வெயிலின்

உஷ்ண உக்கிரகம் 

சுடு மணல் பரப்பில்

 கால்கள் பதிய


நகரும் மேகம்

சில நொடி நேரம்  

குடை நிழலாகி

உறு துணையாகும்.


வெந்தணல் வீசும்

வெயிலின் தாக்கம்

பூந்தளிர் மேனியை

பொசுக்கிடும் போது


விருட்சம் பரப்பும்

நிழலின் அடியில்

தஞ்சம் புகுந்து

தப்ப முயல்வேன்.


என் நிழல் மட்டும்

என் பயனின்றி

உள்ளங் காலிடை

ஒளிந்திடக் கண்டேன்.


உன்னுடன் ஒட்டும்

ஒரு சில உறவுகள்

உற்ற நேரத்தில்

உறு துணை வாரா.



-சுந்தர மணிவண்ணன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%