
*🌹✍️மன்னிப்பு*
*உண்மையான*
*கா த ல ர் க ளு க் கு ள்*
*மட்டுமே*
*ஏராளமான பொய்கள்*
*மன்னிக்கப்படுகின்றது!*
*🌹✍️திருமதி*
*கா த லி க் கு ம் போ தே*
*நீ*
*உன்*
*வலது காலை*
*எடுத்து வைத்து*
*என்*
*இ த ய த் தி ற் கு ள்*
*வந்ததால்*
*அப்பொழுதே*
*என்*
*திருமதியாகி விட்டாய்!*
*🌹✍️தீபம்*
*நீ*
*உன்*
*அன்பால்*
*விளக்கேற்றுகிறாய்!*
*தீபச் சுடராய்*
*எரிகிறது*
*நம்*
*கா த ல்!*
*🌹✍️களிப்பு*
*கோயிலில்*
*எம்பி எம்பி*
*மணியடிக்கிறாய்!*
*அதை ரசிக்கும்*
*என்*
*மனமோ*
*துள்ளித் துள்ளிக்*
*களிக்கிறது!*
*🌹✍️இசை*
*என்*
*விழிகளில்*
*நீ*
*விழும் போதெல்லாம்*
*சங்கீதம்*
*இசைத்துக் கொள்கிறது*
*என் மனம்!*
*🌹✍️பட்டாம் பூச்சி மனசு*
*வண்ணத்துப் பூச்சியைத்*
*துரத்திக் கொண்டு*
*தொடர்கிறாய்!*
*அதை ரசிக்கும்*
*என்*
*மனமோ*
*வண்ணத்துப் பூச்சிக்குத்*
*துணையாகப் பறக்கத் தொடங்குகிறது!*
*🌹✍️விடியல்*
*விடியல்*
*கொஞ்சம் கொஞ்சமாய்*
*எட்டிப் பார்க்கிறது!*
*இன்னும் உறங்காமல்*
*விழித்துக் கொண்டு தான்*
*இருக்கிறோம்!*
*நீ யு ம்*
*நா னு ம்*
*கா த லு ம்!*
*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?