கர்வம்! வெற்றியில் தோன்றும் உணர்வு
மனதை அலைப்பாயச் செய்யும்
மற்றவர் மனம் வருந்திடச் செய்யும்
உள்ளே வந்ததும் எதிர்மறை எண்ணங்கள்
எழுந்து தனது ஆதிக்கம் செய்யும்
ஒருநிலை கொள்ளா நிலை தடமாறும்
எதிரிகளை சம்பாதித்து தோழமை அழிக்கும்
உண்டாகும் மகிழ்ச்சி கானல் நீராகும்
தலைக் கனம் வந்து தத்தளிக்கும்
பொய்யைக் கூட நிஜமென சொல்லும்
உண்மை அறிய பொறுமை இன்றி
வாழ்க்கைப் பாதை மாறித்தான் போகும்
சான்றோர் சொல் மதியா மந்தம்
கொண்டே தானே சரியென நினைக்கும்
அக்கம் பக்கம் பார்க்க பிடிக்காது
உறவு மறக்கும் உற்றார் துறக்கும்
கர்வம் கொண்டால் வளரும் வன்மம்
நல்லவை கெட்டவை பிரித்து பார்க்கா
நய வஞ்சகம் செய்யத் தூண்டும்
வெற்றியை கொண்டாடி கொஞ்சம் மகிழ்ந்து
கிடைத்ததை தக்க வைக்க எண்ணி
முயற்சி செய்து மீண்டும் மீண்டும்
வெற்றிப் படியேற
பற்றும் கைப்பிடி
இலக்கு கண்டு கனவு பலிக்கும்
இதையறிந்தவர்
தோல்வியுறாதார்
இன்புற்று வாழ இதுவே வழியாம்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?