பூக்கள் மழைப் போல
கையில் விழும் …
வாசம் இல்லையெனினும்
மலர்ச்சி இருந்தாலும்
உண்மையென நம்பாதே
காலி கண்ணாடிக் குடுவையில்
நீர் மேலெழும் காட்சி…
தெய்வீகம் எதுவுமில்லை
தந்திரம் மட்டுமே
உண்மையென நம்பாதே
காற்றில் கரைந்த காகிதம்
மீண்டும் காற்றில் தோன்றும்...
அது அதிசயமில்ல
கண்ணை மயக்கும் கலை.
உண்மையென நம்பாதே
அசாத்யமாகத் தோன்றுபவை
விளையாட்டாய் புனையும்
தந்திரங்களை வியப்பாய்... ரசிக்கலாம்…மகிழலாம்...
உண்மையென நம்பாதே
வானிலிருந்து விழும் மலர்கள்... போர்வையிலிருந்து பறக்கும் பறவைகள்...
எளிதில் கிடைக்கும் செல்வம்...
எல்லாம் கண்களைக் கவரும் வித்தைகள்...
மந்திரஜாலங்கள் ...
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்...
மாயை மனம் கவரும்,
உண்மை உள்ளத்தைக் (உள்ளதை) காப்பாற்றும். ✨
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?