காக்கிச்சட்டை

காக்கிச்சட்டை

 


வீட்டுக்கு அருகாமையில் உதித்த சூரியனை பார்க்க நேரமில்லை...

உதிரமும் உறைந்திருந்தது உண்ண நேரமும் இல்லை.. 

உயிர் மூச்சு விட நேரமும் இல்லை...

 கரைந்து ஓடிய வியர்வை துளிகளை துடைக்க நேரமில்லை...

 துரிதமாக செயல்பட்டது விழிகள்...

 காக்கிச் சட்டையில் படிந்த கறைகளை தினமும் அகற்ற நேரமில்லை... 

போதவில்லை நேரம் புரட்டி எடுக்கின்றது

வாழ்க்கையை...

கைத்தடியில் இருந்த கவைக்கொல் ..

ரோட்டில் ஓரத்தில் உயிர் மாய்த்து இருந்த ஒரு அற்ப ஜீவனை அகற்றும் பணியில் ..

மூக்கின் நாசியை வாருடிய கவிச்சி வாடை..

 கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தது கைகள் ..

துப்புரவு பணியாளரின் துவளாத நெஞ்சம்..

 தினமும் ஒவ்வொரு நாளையும் புதுமையாக்கிக் கொண்டிருந்தது...

காக்கிச்சட்டை கசங்கினாலும் கண்ணியமாக வேலை செய்கின்றது..



கவிஞர் நா.மோகன செல்வி மனோகரன் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%