
" மூங்கில் மரத்திற்கும்
இசைக்கும் காதல்
கடலலைக்கும்
மணலுக்கும் காதல் .... "
மலைக்கும் பசுமைக்கும்
காதல் அருவி பாறைக்கும்
நீருக்கும் காதல்....."
காற்றுக்கும் பூவுக்கும்
காதல்
இசைக் கருவிக்கும்
இசைப்பவனுக்கும்
காதல் ...."
இமைக்கும் விழிக்கும்
காதல்
மழைக்கும் மண்வாசத்திற்கும்
காதல் ..."
அசைந்தாடும் பரிசலுக்கும்
ஆற்று நீருக்கும்
காதல் ..."
ஏற்றத்திற்கும் சுரக்கும்
கேணி நீருக்கும்
காதல் ..."
மனதுக்கும் கனவுக்கும்
காதல் உழைப்பிற்கும்
வியர்வைக்கும் காதல் .... "
ஆண் பெண் தாண்டி
இயற்கைக்கும் காதல்
உண்டு ரசித்துப்
பாரீர் ....."
- சீர்காழி .ஆர். சீதாராமன்.
9842371679 .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?