திரும்புமா

திரும்புமா



   " நீதி ஒரு நாள்

     பேசும் நேர்மை

     ஒரு நாள்

     நடமாடும் .... "


     தூய்மை ஒரு

     நாள் வழிகாட்டும்

     நல்லவரை

     பார்ப்பது அரிது .... "


     பேசுவது அரிது

     பணக்காரராய்

     காண்பதும் அரிது .... "


      எளிமை என்பது

      உடை போல

      உண்மை என்பது

      மானம் போல .... "


       தூய்மை என்பது

       இமைகள் போல

       நேற்றைய கால

       தூயவர்கள் மீண்டும்

       பிறர்பார்களா ...?


       தெய்வத்தின் மீது

       பய பக்தி

       குறைந்து

       போல பக்தி 

       நிரம்பி வழிகிறது .... "


      உள்ளங்கள்

      சமன்படும்

      காலம் மீண்டு

      வருமா மீண்டும்

       வருமா ...?"


      இழந்தது திரும்புமா

      இனியும் அதுவும்

      சாத்தியமா

      காத்திருப்போம்

      விழித்திருப்போம் ..."


  - சீர்காழி. ஆர். சீதாராமன்.

     9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%