காதல் என்ன சாபமா ??

காதல் என்ன சாபமா ??


---கண்கொத்தி பாம்பாய் 

பார்த்து பார்த்து சிதைத்தாயடி

அந்த பார்வையின் அர்த்தம் என்ன ?

உன் புன்னகை பார்த்தே 

புதைந்து போனேனே 

காணாமல் போன என் மகிழ்ச்சி எங்கேடி ?

உன் முடி -நகம் -முகம் -பாதம் என 

என்னுள் அணு அணுவாய் 

மண்டை மூளையெல்லாம் 

பித்து பிடிக்காத குறையாய் 

சித்தம் முழுதும் 

என்னை காதல் பைத்தியமாக்கியது ஏனடி ?

கை கழுவ நினைத்தால் என்னை 

காணாமலே இருந்திருக்கலாமே ?

நீ தொலைத்து விட எண்ணினால் 

தொலைந்து போயிருப்பேனடி ?

என்னை ஏமாற்ற 

காதல் என்ற புனிதமா உனக்கு தேவைப்பட்டது ?!

தேவதையே 

என் நினைவிலிருந்து தொலைந்து போ 

என் நிழலாவது காற்றோடு வாழ்ந்து விட்டு போகட்டும் !!


--- மொத்தமும் வேண்டாமடி-ஒரு

முத்தம் போதும்

நான் பிறவி மோட்சம் பெற!


---முள் குத்தும் வரை

நம்பவே இல்லை ??

உன் கண்கள்

மீன்களென்று!


--- விழுந்தேனடி

எப்பாடு பட்டாவது

எழ வேண்டும்-உன்

துப்பட்டாவிலிருந்து!


---முகம் காணாத கும்மிருட்டில்

ஜகஜோதியாய்

தீப ஆராதனை தட்டோடு வந்தாள்

அந்த ராசாத்தி

இருட்டிலிருந்த வெள்ளை மனசு

ஏனோ நிலா வெளிச்சத்தில்

அழுக்காய்தான் போயிருந்தது

அவள் வந்த கன பொழுதில்!


-லி.நௌஷாத் கான்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%