சிலை அல்லவோ

சிலை அல்லவோ



  " கவிபாடும் மனசு

    துதிபாடும் இதழ்கள்

    விழிபாடும் இமைகள்

    மொழிபாடும் மௌனம் ..."


    நர்தனம் ஆடும்

    கால்கள் முத்திரைக்

    காட்டும் விழிகள்

    நவரசம் காட்டும்

    முகங்கள் ..."


    நிதானம் காட்டும்

    பேச்சு

    வேகம் கூட்டும்

    மூச்சு

    தாகம் காட்டும்

    நாவு

    தாக்கம் காட்டும்

    எதிரொலி ..."


    ஆபரணம் காட்டும்

    கழுத்து

    வீணை கம்பி

    மீட்கும் கூந்தல் .... "


    அமுத ரசம்

    பொங்கும் உதடுகள்

    இடுப்பை அழகு

    படுத்தும்

    ஒட்டியானம் .... "


     நடையை அடையாளம்

     காட்டும் கால்கள்

     மெட்டியை சுட்டிக்

     காட்டும் விரல்கள் ... "


    நெத்தியை ஜொலிக்க

     வைக்கும் பொட்டு

    காதுகளை இசை

    பாட வைக்கும்

    தோடு .... "


     சுற்றி சுற்றி    

     தேட வைக்கும்

     மூக்குத்தி ....."


     அப்பப்பா

     பெண் இனம் தான்

     எத்தனை பிரம்மன்

     மலைத்தானே .... "


   - சீர்காழி . ஆர். சீதாராமன்.

      9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%