ரசனை

ரசனை


உற்று நோக்கி அந்த

ஓவியத்துள் நனைந்தேன்



குற்றால நீர் வீழ்ச்சி

குளிர் வீசி பரவசமாய்



மெல்லத் தழுவி என்

மேனி எங்கும் பரவி



சுற்றித் தரும் சுகத்தை

முற்றும் உணர வைக்கும்



அற்புத ஓவியத்தின்

அழகில் லயித்திருந்தேன்.



பார்த்தவன் ரசனையும்

படைத்தவன் ரசனையும்



ஒன்றென இணைவதே

உயிர் கொண்ட ஓவியம்.



பன்னிரு ஆழ்வார்கள்

படைத்த நல் ஆயிரத்துள்



எல்லாமே கண்ணனென

எமையும் உணரவைத்து



சொல்லால் சுவை நயத்தால்

துதி செய்யும் பாசுரங்கள்



இல்லாமல் வாழ் வில்லை என

இரண்டறக் கலந்து விட்டோம்



-சுந்தர மணிவண்ணன்,

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%