
நேரிசை வெண்பா!
நெருநல்
இருந்தவன்
நேர்ந்தின்றில்
லையே
அருமை
யுலகிலே
ஆன்ற...
பெருமை
உடைத்தன்றோ
இவ்வுலகம்
ஓர்ந்திடு
நண்பா
கடமையைச்
செய்திடக்
காண்!
நிலையற்ற
நம்முடல்
நீளுலகில்
தானே
விலையற்றுப்
போகுமே
வீறு...
கலைகளும்
இல்லாமல்
எங்கோதான்
போய்விடுமோ
யாமறியோம்
சொல்லாமல்
போகுமே
சொல்!
காற்றடைத்த
பையைப்போல்
காணுலகில்
நல்லமுறை
போற்றுமுறை
வாழ்தல்
பொலிவன்றோ...
மாற்றம்
எதுவுமே
என்றும்
எழிலாகத்
தோன்றும்
இதயத்தில்
நாளுமே
எண்!
காலையோ
மாலையோ
காற்றடைத்த
பையது
கோலமுடன்
நீங்குமே
கொள்ளடா...
ஞாலத்தில்
நம்முயிர்
என்றும்
நமக்கில்லை
உண்மையை
நம்மிலே
கொள்ளல்
நனி!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%