காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: துணி தேய்க்கும் தொழிலாளி கைது
சென்னை: கைது செய்த ஆத்திரத்தில் காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 29-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘மதுரவாயல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.
அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். கட்டுப்பாட்டு அறை காவலர், உடனடியாக இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் மதுரவாயல் காவல் நிலையம் சென்ற போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து விசாரிக்கப்பட்டது.
இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பூபதி (43) என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பூபதி, நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அயர்னிங் கடை வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 12-ம் தேதி மதுரவாயல் பகுதியில் உள்ள பூங்காவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக இவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த ஆத்திரத்தில், மதுரவாயல் போலீஸாரை பழிவாங்கும் வகையில், காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?