கிண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை - மகன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு
சென்னை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை - மகன் உயிரிழந்தனர். சென்னை கிண்டி, அருளாகி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (50).
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே டிபன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை சந்தையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் இளைய மகன் கார்த்திக் (15) அமர்ந்திருந்தார்.
அப்போது மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. கிண்டி ஆலந்தூர் ரோடு கல்லாற்று மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், தந்தை - மகன் இருவரும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி அங்கேயே உயிரிழந்தனர். இதைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?