கேலி, கிண்டல் செய்ததால் ஆத்திரம் ஐ.டி. ஊழியர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கேலி, கிண்டல் செய்ததால் ஆத்திரம் ஐ.டி. ஊழியர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது


 

சென்னை: கேலி, கிண்​டல் செய்​யப்​பட்ட ஆத்​திரத்​தில் ஐ.டி. ஊழியர் கார் மீது பெட்​ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். மதுரையைச் சேர்ந்​தவர் ராம் நித்​தேஷ் (26).


சென்னை கிண்​டி, மடு​வன்​கரை பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்பு ஒன்​றில் நண்​பர்​களு​டன் தங்​கி​யுள்​ளார். இவர் ஈக்​காட்​டு​தாங்​கலில் உள்ள தனி​யார் ஐடி நிறு​வனத்​தில் வடிவ​மைப்பு பொறி​யாள​ராக பணி செய்​கிறார். கடந்த 28-ம் தேதி இரவு ராம் நித்​தேஷ் வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்​தார்.


மறு​நாள் அதி​காலை 4.30 மணி​யள​வில், அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு வளாகத்​தில் நிறுத்​தப்​பட்​டிருந்த இவரது விலை உயர்ந்த கார் தீப்​பற்றி எரிந்​தது. உடனடி​யாக தீ அணைக்​கப்​பட்​டது.


பிறகு இதுகுறித்து கிண்டி காவல் நிலை​யத்​தில் ராம் நித்​தேஷ் புகார் தெரி​வித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக சம்பவ இடத்​தை சுற்​றி​லும் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்றி ஆய்வு செய்​தனர்.


இதில் ராம் நித்​தேஷ் காரின் மீது பெட்​ரோல் குண்டு வீசப்​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்து பெட்​ரோல் குண்டு வீசி​விட்டு தப்​பிய கிண்டி மடு​வங்​கரையைச் சேர்ந்த விஜயபிர​பாகரன் (25) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.


விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட விஜயபிர​பாகரன் வெல்​டிங் வேலை செய்து வரு​வது தெரிய​வந்​தது. சில நாட்​களுக்கு முன் ராம் நித்​தேஷ் குடி​யிருப்​பில் குடி​யிருப்​பவர்​களில் சிலர் விஜய பிர​பாகரனை கேலி​யும், கிண்​டலும் செய்​துள்​ளனர்.


இதனால், ஆத்​திரம் அடைந்த விஜயபிர​பாகரன், பழி​வாங்​கும் நோக்​கில் பெட்​ரோல் குண்டை அந்த குடி​யிருப்​புக்​குள் வீசியது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து விஜயபிர​பாகரன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%