குணசீலம் பெருமாள்

குணசீலம் பெருமாள்


குணம் கிடைக்குது..

கொடி பறக்குது.. குணசீலத்திலே!..

பெருமாளின் பாதத்தை பார்க்கப் பார்க்க..

செல்வம் பெருகுதாம்!


ஜெயம் பிறக்குது..

சுகம் கிடைக்குது.. சென்ம பாபம் கரையுதாம்!! புரட்டாசி சனியில் சென்று வணங்கிட யோகமும் தழைக்குதாம்!


கையில் கோலுடன்.. நீதி வழங்கிட... நின்ற கோலமாம்.. பெருமாள் முன்பு நிற்கயில்.. புதிய மனிதனாய் நம் வாழ்க்கையும் மாறுமாம்!


குலதெய்வமே.. என் குறை யறிந்தவா.. எனை மீட்டிட வா..

யான் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை அய்யனே பொறுத்தருள்வாய்!


குடும்பமாகவே.. உன்னை வணங்கிட எமக்கு வரமளிப்பாய்..!குணசீலனே.. குல தெய்வமே.. என்றுமே துணையிருப்பாய்!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%