
மெய்யரை வணங்கிட வாருங்கள்.! திரு மெய்யம் நோக்கி வாருங்கள்.!
மைநாகம் மேல் கிடந்த கோலத்தை மெய்யுருக காண வாருங்கள்.!
சத்திய மூர்த்தி திரு நாமமாம்.. உய்ய வந்தாள் தாயுடன் உறைபவனாம்.. திருமெய்யன் பாதம் பணிவதற்கே.. திருமயம் நகருக்கு வாருங்கள்!
பாவங்கள் நீக்கும் புஷ்கரணியில்.. அதிகாலை நீராட வாருங்கள்..! பரந்தாமனின் முன்னே நின்று மெய்யுருக தினம் வேண்டுங்கள்!
நூற்றி எட்டு திவ்விய தேசத்தின் ஆதி அரங்கம் திருமெய்யமாம்! போற்றிப் பணிந்து வணங்குவோர்க் கெல்லாம் பெருமாள் அருளே நிறைந்திடுமாம்!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%