வனவிலங்கு வாழட்டும்

வனவிலங்கு வாழட்டும்


ஊர்வனவும் பறப்பனவும் ஒன்றாக இருக்குது.! ஊர்யெரியும் போர்களிங்கு எவராலே நடக்குது?


சேர்ந்துஉண்ணும் பழக்கமுள்ள காக்கையினம் கரையுது!

சேர்ந்து குடியை அழிக்கும் மனிதர் அறிவுமட்டும் குறையுது!


தூரப்பார்வை யோடு பருந்து சேர்ந்து உணவைப் புசிக்குது! கோரமாக போர்களத்தில் அன்பின்கனிகள் கசக்குது!


அமைதியாக மணிப்புறாக்கள் ஆனந்தமாய் இருக்குது! அன்னக்கையாய் வல்லரசும் ஏனோயின்று கொக்கரிக்குது!


சேவை செய்ய அணில்கள் கூட சேர்ந்து இங்கே நடக்குது! செல்லரித்து போகும் எலும்புக் கூடுகள் ஏன் குதிக்குது?


வனவிலங்கு அத்தனையும் வாழ்வை ரசித்து வாழுது..

வாழவைப்பதாக இங்கு மாந்தரினம் குதிக்குது.!


சிங்கம் புலி.. யானை கரடி

காட்டுக்குள்ளே வாழட்டும்!

இருக்குமிடத்தில் இருந்தாலோ.. எவ்வுயிரும் வாழுமே..


யானை போகும் பாதையிலே.. வீடு கட்டும் மனிதனே... யானை ஊரில் வந்ததென்று புலம்புகிறாய் வேதனை..!


புலியுறங்கும் காட்டுக்குள்ளே.. தங்குவிடுதி கட்டுவாய்! பாதையிலே புலிகள் என்று வனத்துறையைத் திட்டுவாய்..!


வாய்ப் பேசா வனவிலங்கை வாழவிடு மனிதனே.. குணமுடைய மனிதன் என்று.. கொடியை ஏற்று புனிதனே.!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%