பூசல் நிறைந்த உ.லகிலே.. பிறந்தபின்
என்ன பாடுவேன்?
ஈசல் போலப் ஈனங்கள்
ஈர நெஞ்சினைத் தேடுவேன்!
காசே இங்கு கடவுளாய்
கருதும் மாந்தர் நடுவிலே.. கருணை தேடி ஓடினேன்..!
எங்கும் சண்டை நடக்கிறதே.. எதற்கும் ஆயுதம் எடுக்கிறதே..
மங்கா மனித நேயத்தை
மறந்தே இங்கு நடக்கிறதே.. எங்கோ பிறந்தோம் சிலநாட்கள் இங்கே தங்கிச் செல்ல வந்தோம்..
அதற்குள் எத்தனைப் போர்களடா.. அழிவுக் கருவிகள் கைகளிலே
எதற்காய் ஏந்தி போராடி எதனை எடுத்துச் செல்வோமோ?
போரும் பசியும் கொடும் நோயும்.. பொல்லா நிலையைத் தந்திடுமே.. யாரும் இங்கே நிரந்தரமோ.? ஏனோ அறியா சனமானோம்!
போரில் உலகைக் காண்போமோ.?போரை எதிர்த்தே குரல் தருவோமே.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?