
பெண்ணாய் பிறக்க வேணும்.. நானும் பெண்ணாய் பிறக்க வேணும்.! கண்ணான இந்த பூமிப் பந்தை தாங்கும் பூமாதேவி போல நானும்..சுமக்கப் பெண்ணாய் பிறக்க வேணும்.!
கண்ணால் காணும் போதே வெறுக்கும் தொழு நோயாலரை.. தொட்டு எடுத்து அணைத்த அந்த அன்னைத் தெரசா போல நானும் பெண்ணாய்ப் பிறக்க வேணும்.!
வீர வேலு நாச்சியாராய் போர்களத்தில் வேல் சுமந்து.. அடிமைபூமி விடுதலைக்கு போராடிய புரட்சி பெண்ணாய் நானும் பெண்ணாய்ப் பிறக்க வேணும்.!
வீட்டைப் பெருக்கும் பெண்களெல்லாம்.. ஏட்டைப் படித்து மருத்துவராய்.. புற்று நோயை விரட்டத் துடித்த முத்து லெட்சுமி ரெட்டிப் போல நானும் இங்கே பெண்ணாய்ப் பிறக்க வேணும்..
காட்டைத் திருத்தி.. வீட்டைத் திருத்தி.. விண்வெளியில் கலத்தைச் செலுத்தி..
பாரதியின் புதுமைப் பெண்கள் நிறைந்த நாட்டில் நானும் இங்கே பெண்ணாய்ப் பிறக்க வேணும்.!
பாட்டியாக.. தாயாக.. தாரமாக.. மகளாக..தங்கையாக.. அக்காளாக.. பேத்தியாக பிறந்து வந்து.. நம்மை சுற்றி.. நம்மை உயர்த்தி
நம்மைத் தாங்கும் வேர் என்வே வாழுகின்ற பெண்ணாகவே நானும் பிறக்க வேணும்.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?