
பயன்படுத்தப்பட்டு
உதாசீனம் செய்யப்படும்
காற்றில் கலந்து மாசாகும்
கண்ணில் கலக்கும் தூசாகும்
தரத்தால் பிரித்த குப்பையெல்லாம்
தரணியில் நாளும் பயனாகும்
வேண்டாப் பொருளின் சேர்க்கையினால்
விரும்பிய பொருளும்
வீணாகும்
குணத்தால் குப்பை சில நேரம்
மனிதன் தேவைக்குப் பணமாகும்
உரமாய் மாறிப் பல நேரம்
உழவுக்குத் துணையாய்
உதவி செய்யும்
குணமே இல்லா மனிதரும்
குப்பைக்குச் சமமென மாறிடுவர்
குப்பையின் பயனும் சிறிதின்றி
குவலயத்தில் நாளும்
உலா வருவர்
பயனை நாளும் அடைந்து விட்டு
பழகும் மனிதர் குணத்தாலே
பண்பை இழந்து வாழ்ந்திடுவர்
குணத்தில் கெட்ட மனிதரினும்
குப்பை உயர்வைப் பெற்றிருக்கும்
தமிழ்நிலா
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%