குறை யொன்றுமில்லை!

குறை யொன்றுமில்லை!


எனை நீ  கை பிடித்த 


நாள் முதல் ஒரு 


குறையுமில்லை 


ஆனால் ஒன்றைத் தவிர ! 


என் மீது நீ கொண்டுள்ள 


பாசமும் அன்பும் 


கணக்கிலடங்கா 


ஒன்றைத் தவிர ! 


என் பெற்றோரிடம் 


நீ காட்டும் அனுசுரணையும் 


இன் முகமும் அருமை 


ஒன்றைத் தவிர ! 


எள் என்றால் எண்ணெயாக 


வந்து அனைத்து வேலைகளையும்  


மேற்கொள்ளும் உன் செயல்பாடு 


மெச்சத் தகுந்தது 


ஒன்றைத் தவிர ! 


ஆம் இப்படி எல்லா 


விஷயங்களிலும் ஒரு 


குறையுமில்லாமல் இருக்கிறதே 


என்கிற குறை மற்றவர்களுக்கு! 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%