கூத்தப்பன்குடிகாட்டில் நியாய விலை கடையை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.
Jan 09 2026
13
கடலூர், ஜன.9-
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், திட்டக்குடி நகராட்சி கூத்தப்பன்குடிகாட்டில் சுமார், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூத்தப்பன்குடிகாடு பகுதியில் நியாய விலைக் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்ததால் நியாய விலைக் கடைக்கு சென்று அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அப்பகுதிவாசிகள் வாங்கி வந்தனர்.இதனால் கூத்தப்பன்குடிகாடு நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என, நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசனிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கூத்தப்பன்குடிகாடு காலி இடத்தில், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 - 24ன் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில். நியாய விலைக் கடை திறப்பு விழா, நேற்று மாலை நடைபெற்றது. இதில், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்று, நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?