கேரளாவிலிருந்து இடம்பெயரும் யானைகள்: வனத்துறை எச்சரிக்கை
Dec 16 2025
10
மஞ்சூர் - கோவை சாலையில் யானைகள் உலா வருவதால், அவற்றை தொந்தரவு செய்யாமல் கவனமுடன் வாகன ஓட்டிகள் பய ணிக்க வேண்டும் என வனத்துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் - கோவை சாலையில் கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகள் தமிழக - கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. கெத்தையிலிருந்து முள்ளி வரை நீரோடைகளில் தண்ணீர் வரத்து இருப்பதால், யானைகள் இப்பகுதி களில் முகாமிட்டுள்ளன. தமிழக வனப்பகுதியில் யானைகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்ப தால், கேரளம் மாநில வனப்பகுதி யிலிருந்து 20க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்கு இடப்பெயர்ந்துள்ளன. பகல் நேரங் களில் சாலையில் சுற்றித்திரிந்து உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. சாலை யில் கூட்டமாக உலா வரும் யானை களை, இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி, புகைப்படம் எடுத்து தொந் தரவு செய்வதால் அவ்வப்போது விபரீத செயல்கள் நடக்கிறது. தற் போது மேற்கண்ட சாலைகளில் யானைக்கூட்டம் அதிகளவில் உலா வருவதால், குந்தா ரேஞ்சர் செல்வ குமார், வனவர் சதீஷ்குமார் தலை மையில் வன ஊழியர்கள் பகல் நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடு பட்டு, யானைக் கூட்டத்தை கண் காணித்து வருகின்றனர். இதுகுறித்து ரேஞ்சர் செல்வ குமார் கூறுகையில், கெத்தை வனப்பகுதியில் யானைக்கூட்டம் அதிகளவில் சுற்றி திரிவதால் வனத் துறை ரோந்து வாகன ஊழியர்கள் கண்காணித்து, யானைகளை வனத்திற்கு விரட்டி வருகின்றனர் குறிப்பாக. இச்சாலையில் பயணிக் கும் வாகன ஓட்டிகள் வாகனங் களை நிறுத்தி தொந்தரவு செய் வதை தவிர்க்க வேண்டும். பணி யில் உள்ள வனத்துறை ஊழியர்கள் அறிவுரையை தவறாமல் பின்பற்றி இச்சாலையில் பயணிக்க வேண் டும். எக்காரணத்தைக் கொண்டும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தியுள்ளோம், என்றார். இதேபோன்று, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பில்லூரில் இருந்து கெத்தை செல் லும் சாலையோரமாக யானைக் கூட்டம் குட்டியுடன் உலா வந்தது. சாலையோரம் வளர்ந்துள்ள செடி கொடிகளை உண்டபடி நின்றன. இதனால் அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்த னர். அவ்வழியாகச் சென்ற சில வாகன ஓட்டிகள் தங்களது செல் போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைர லாக பரவி வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?