கோவையில் போதைப் பொருளுக்கெதிரான விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டியில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுவை முன்னிறுத்தி, கோவை, அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்வி நிறு வனங்கள் சார்பில் 9 ஆவது ஆண்டு மாரத்தான் போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றது. கேபிஆர் கல்வி நிறுவனங்க ளின் நுழைவாயில், கணியூர் சுங்கச்சாவடி மற்றும் கருமத் தம்பட்டி உள்ளிட்ட மூன்று இடங்களில் துவங்கப்பட்டது. கல்வி குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்த னர். இந்திய கபடி வீரர் பிரபஞ்சன், தடகள வீரர் பிரவீன் சித்திரவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகே யன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். 3 கி.மீ, 5 கி.மீ மற்றும் 10 கி.மீ என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகிளல், 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரி விலும் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக் கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கபடி வீரர் பிரபஞ்சன், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில் அதற்கென பிரத்யேக உயர் தர பயிற்சி மையம் தமிழகத்தில் இருந்தால், கபடி வீரர்கள் சாதிப்பார்கள். தமிழக அரசு கபடி வீரர்க ளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தாலும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 500 அணி கள் உள்ளன. கிரிக்கெட் போட்டியை போன்றே கபடியி லும் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதால், கபடி உள் ளிட்ட போட்டிகளில் இளைஞர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது, என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?