வடசென்னையில் முதல் முறையாக அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் ஒரே கடையில் கிடைக்கும் வகையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சாலையில் “வடசென்னை வாசி புத்தக நிலையம்” துவக்க விழா ஞாயிறன்று (டிச. 14) நடைபெற்றது. வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் புத்தக நிலையத்தை திறந்து வைத்தார். பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் விற்பனையை தொடங்கி வைத்தார். திரைக்கலைஞர் பாக்கியம் சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதுகுறித்து எம்.ராமகிருஷ்ணன் கூறுகையில், வட சென்னையின் மையப் பகுதியில் அனைத்து பதிப்பகங்க ளின் நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தோழர்கள் என்.விஜயகுமார், ஷாஜகன், நா.வெண்மணி ஆகி யோர் இணைந்து இதை அமைத்துள்ளனர். இது ஒரு நல்ல முயற்சி என்றும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய அவர் வடசென்னை மக்களும் தங்களுக்கு தேவையான நூல்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் விஜயன் (தமுஎகச), ஆய்வாளர் பகத்சிங், ஆர்.லோகநாதன், எல்.பி.சரவணத்தமிழன் (சிபிஎம்) உள்ளிட்ட பல்வேறு பதிப்பகத்தார், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?