சென்னை கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள மத்திய அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் திங்கட்கிழமை (டிச.15 ஆம் தேதி முதல் டிச.19) முதல் வெள்ளிக்கிழமை வரை தொழில் ்முனைவோர் மேம்பாடு குறித்த ஒரு சிறப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்த உள்ளது. இந்தப் பட்டறையானது தின மும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். இந்தப் பயிற்சி அமர்வில் தொழில்முனைவின் அடிப்படை கள், வணிக நெறிமுறைகள், சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சந்தைக் கணக் கெடுப்பு, திட்ட அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை, டேலி மென்பொருளைப் பயன்படுத்தி கணக்கு புத்தகப் பரா மரிப்பின் அடிப்படைகள், சிறு அளவிலான வணிகம் தொடர்பான சட்டங்கள், ஜிஎஸ்டி, மாநிலத் தொழில் கொள்கையைப் புரிந்து கொள்ளுதல், மற்றும் எம்எஸ்எம்இ பதிவு போன்ற முக்கியமான பல தலைப்புகள் குறித்து விரி வாகப் பாடம் எடுக்கப்படும். இந்தப் பட்டறையில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வர்கள் மற்றும் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம் தங்குவதற்குத் தேவை யான விடுதி வசதியும் கூட முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் 8668102600 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?