
பிரயாணித்துக்
கொண்டிருந்த நான்.
கருத்து திரண்டிருந்த மேகங்கள்.
விரைந்தோடிக்
கொண்டிருந்த சாலை.
முகம் மோதி முத்தமிட்ட காற்றின் ஜில்லிப்பு.
வேகம் காட்டிய நகரப்பேருந்து.
ஜன்னல் வழி விழி விரித்த குழந்தையின் கையசைப்பு.
சிரிப்புடன் கையசைத்துக்கடந்த
இரு சக்கர வாகனக்காரர்.
கூப்பிடு தூரத்தில் தென்பட்டுப்பிரிகிற கிராமத்துச்சாலை.
அதனை அண்மித்த தொலைவில்
மின்சார வாரிய அலுவலகம்.
அதே வரிசையில் தென்பட்ட
காவல் நிலையம்.
அதுதாண்டிய தொலைவில்
நடவு பட்டிருந்த நூல் மில்.
அனிச்சையாய் குறைந்த
இருசக்கர வாகனத்தின் வேகம்.
சாலையோர ஓடையிறங்கி
சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிற நான்.
இரு சக்கர வாகன ஸ்டாண்டின் மீது சொட்டிய ஒற்றைத்துளி.
சுற்றிலுமாய் பச்சையுடுத்தியிருந்த ஊரகத்து மண்.
உயிர் நடவு செய்யப்பட்டிருந்த மனிதர்கள்.
தலைக்கு மேல் வரைவுகொண்டோடிய மின் கம்பிகள்.
அதன் மேலமர்ந்திருந்த ஒற்றைப்பறவை.
தியானித்துக் கொண்டிருந்த பெருமரம்.
மழைகோட் அணிந்து கொண்டிருந்த நான்.
நேர் கோடு வரைந்து சென்று கொண்டிருந்த எனது இருசக்கர வாகனம்.
சப்தம் கூட்டிய சிணுங்கல்.
மழை ஊடுருவி சென்று கொண்டிருக்கிற நான்.
இப்பொழுது நான் மழையாகவும்,
மழை நானாகவும்!
விமலன்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?