கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!

கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!


விழுப்புரம்,செப்.16-

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது. இந்த உறியடி உற்சவத்தை முன்னிட்டு 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதி அருகில் உறியடி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு கோயிலை வலம் வந்து பக்த கோடிகள் உறியடி உற்சவத்தை கோலாகலமாக நடத்தினர். இதில் பலர் தொங்கிய உறியை குறி வைத்து தாக்கினர். உறியை குறி வைக்க முடியாத அளவிற்கு உறியை அடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை வீசி அடித்து அவர்களது இலக்கை சிதறடிக்கச் செய்தனர் அருகில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் மீறி போட்டியில் கலந்து கொண்டவர்கள் உறியை உடைத்து வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உறியை குறி வைத்து அதிலிருந்த பரிசு பொருட்களை எடுத்துக் கொண்டனர். இந்த உறியடி உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோலியனூர் அறங்காவலர் குழு தலைவர் சா. மண்ணாயி மற்றும் கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தக்கார் சா. வல்லரசு ,அறங்காவலர் ரேவதி ஜெயக்குமார் மற்றும் அறங்காவலர் குமார், பார்வதி ரவி, கோயில் அர்ச்சகர் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால் மற்றும் கோலியனூர் கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையதா துறை ஆகியோர் விமரிசையாக செய்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் கலந்து கொண்டு உறியடி உற்சவத் திருவிழாவை கண்டுகளித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%