கோவில்பட்டியில் கேரளா எலைட் ஃபர்னிச்சர்ஸ் திறப்பு விழா

கோவில்பட்டியில் கேரளா எலைட் ஃபர்னிச்சர்ஸ் திறப்பு விழா



கோவில்பட்டி – இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கேரளா எலைட் ஃபர்னிச்சர்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.


கேரளா எலைட் ஃபர்னிச்சர்ஸ் நிறுவனம் சிவகாசியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் 2ஆவது கிளை, கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. முன்னாள் அமைச்சர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பிஎஸ்ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் சோலைச்சாமி, தொழிலதிபர் ஜெயசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.


சீரியல் நடிகை சல்மா அருண், விஜய் டிவி புகழ் திவாகர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடையின் உரிமையாளர்கள் நல்லீஸ்வரன் – சிவசங்கரி, குருமூர்த்தி – பத்மாவதி ஆகியோர், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.


திறப்பு விழாவை முன்னிட்டு, முதல் 500 பேருக்கு, ரூ.10-க்கு ரூ.1,500 மதிப்பிலான குக்கர் வழங்கப்பட்டது. அதோடு, திறப்பு விழாவையொட்டி, கட்டில், டைனிங் டேபிள், சோஃபா அனைத்துப் பொருட்களும் 20 முதல் 25 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், உள்ளூர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%