கோவில்பட்டியில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா

கோவில்பட்டியில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா


கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மரியாதை


சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், பெண் விடுதலைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரப்பிய, போராடிய தந்தை பெரியாரின் பிறந்ததினம் நாடெங்கும் கொண்டாடப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம்,

கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பெரியார் சிலை முன்பு சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், ஞானம், இந்திய கலாச்சார நட்புறவு கழக மாவட்ட துணை செயலாளர் அபிராமி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிஷீலா, அன்னலட்சுமி, மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், முத்துராஜன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%