கயத்தாரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
Sep 18 2025
47

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாரில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி வரவேற்றனர். இதில் நகர செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அழகர்சாமி, போடுசாமி, பழனிச்சாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?