🍪 சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பிறகு குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையாக இருக்கும்.
🍪 எண்ணெய் மற்றும் நெய் கலந்து சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொண்டால் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
🍪 சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.
🍪 சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய் தடவி வைத்தால் கருப்பாக காய்ந்து போகாமல் இருக்கும்.
🍪 சப்பாத்தி சுடும்போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பிறகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
🍪 சப்பாத்தியை நன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால் சப்பாத்தி நன்கு உப்பி வரும். மிருதுவாக இருக்கும்.
🍪 சப்பாத்தி திரட்டும் போது மாவை தொட்டு சப்பாத்தியை திரட்டி பிறகு எண்ணெய் ஊற்றி திரட்டினால் சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றத் தேவைப்படாது.
🍪 சப்பாத்தி தேய்க்கும் போது மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக தேய்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
🍪 சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.
🍪 வெந்நீரில் மாவினைப் பிசைவதால், பிசையும் போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
சாப்பாத்தி மென்மையாக இருக்க டிப்ஸ்!
🍪 சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
🍪 சப்பாத்தி உருட்டும்போது அதனை நாலாக மடித்து உருட்டினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
🍪 சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
🍪 கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு வராது.
🍪 சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
🍪 சப்பாத்தி மென்மையாக இருக்க சப்பாத்தி மாவை கலக்கும் போது பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி சேர்க்கவும்.
🍪 சப்பாத்தி மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி மென்மையாகவும் உப்பியும் கிடைக்கும்.
🍪 சூடான பால் சிறிதளவு சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
பால் புளிக்காமல் இருக்க டிப்ஸ்!
🍺 பால் ஆறினால் மேலே ஏடு படியும் அதனால் லேசாக தண்ணீர் தௌpத்து வைத்தால் ஏடு படியாது.
🍺 பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
🍺 பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
🍺 பால் பொங்கி வரும் போது அதனை தவிர்க்க சிறிது தண்ணீர் தௌpக்கலாம்.
🍺 தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் தயிர் புளிக்காது.
🍺 மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும். தயிர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
🍺 தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!
👉 அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.
👉 உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
👉 காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
👉 பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் உணவை உண்ணக் கூடாது.
👉 இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டே சாப்பிடக்கூடாது.
👉 காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
👉 சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
👉 தொலைக்காட்சியைப் பார்த்தபடியும் உணவினை சாப்பிடக்கூடாது.
👉 சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக்கூடாது.
👉 இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
👉 உணவினை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது மற்றும் அதிக கோபத்துடனும் உணவினை உண்ணக் கூடாது.
👉 சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
👉 ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா!
🐞 பருப்புகளில் பெருங்காயத்தைத் தட்டிப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
🐞 அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.
🐞 உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.
🐞 துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும், வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுந்தம் பருப்பு எனில் மஞ்சள் தூளும், உப்பும் கலந்து வைக்கலாம்.
🐞 மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்பொடி டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
🐞 பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.
🐞 மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம். கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத்தூளும் தூவலாம்.
🐞 கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
🐞 தனியா டப்பாவில் 4 முதல் 5 துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.
🐞 புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.
🐞 பயிறு மற்றும் தானியங்களில் வேகமாக வண்டுவிழும். அந்த டப்பாக்களில் பூண்டையோ, மஞ்சள் துண்டையோ அல்லது வசம்புப் பொடியையோ கலந்து வைத்தால் சீக்கிரம் வண்டு பிடிக்காது.
🐞 சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைத்தால் போதும்.
🐞 காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது, காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
🐞 எள் டப்பாவில் சிறிது நெல்லைப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
🐞 பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.
🐞 சமையல் அறையில் உள்ள அலமாரியில் வேப்பிலைகளைப் பரப்பி அதன் மீது பேப்பர் போட்டு மளிகை பொருட்களை வைத்தால் பூச்சி வராமல் தடுக்கலாம்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
பழைய டூத் பிரஷை பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ்!
டைல்ஸ் இடுக்குகளில் உள்ள அழுக்கை நீக்க
✏ இரண்டு டைல்ஸ்கள் ஒன்று சேரும் இடத்தில் அழுக்குகள் கோடு போன்று தங்கிவிடும். மாப் போட்டுத் துடைத்தாலும் அழுக்குகள் போகாது. அதனால் டைல்ஸ் சுத்தம் செய்யும் போது பிரஷால் இடுக்குகளில் தேய்த்து துடைத்தால் அழுக்கு நீங்கி தரை முழுவதும் சுத்தம் ஆகும்.
சீப்பை சுத்தமாக்குவதற்கு
✏ சீப்பை சுத்தம் செய்வதற்கு சூடான நீரில் சோப்பு தூளை கலந்து அதில் சீப்பை ஊற வைக்கவும். பின்பு சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் உள்ள அழுக்குகளை தேய்த்து எடுத்தால் சீப்பில் உள்ள அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும்.
கேஸ் அடுப்பு
✏ எண்ணெய் பசை படிந்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி இவற்றை சுத்தம் செய்வதற்கு பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா மற்றும் சோப்பு தூள் இரண்டையும் வெந்நீரில் கலந்து பிரஷால் தேய்த்து துடைத்தால் எண்ணெய் பசைகள் நீங்கிவிடும்.
காலணிகள்
✏ ஷூ, செருப்பு முதலான காலணிகளை சோப்பு நீரால் பிரஷை வைத்து தேய்த்து துடைத்தால் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். நன்கு சுத்தம் செய்த பிறகு ஷூ-க்கு பாலிஷ் போட்டால் ஷூக்கள் புதிது போல் இருக்கும்.
புருவம், மீசை மற்றும் நகங்களை சுத்தமாக்க
✏ புருவம் மற்றும் மீசைகளை தவறாமல் சுத்தமான பிரஷால் சரி செய்யும் போது புருவம், மீசை அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கின் மூலமாக நோய்த் தொற்று ஏற்படலாம். அதனால் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். வெதுவெதுப்பான நீரில் நகங்களை சிறிது நேரம் வைத்து கழுவி விட்டு பின்பு பிரஷால் மெதுவாக நக இடுக்குகளில் சுத்தம் செய்தால் நகங்கள் சுத்தமாகும்.
கதவு, ஜன்னல் இடுக்குகளில் உள்ள அழுக்கு நீங்க
✏ மேலும், கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகளில் ஒட்டடை மற்றும் அழுக்கு சேர்ந்திருக்கும். பூ வேலைப்பாடுகள் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளின் ஓரங்களில் இருக்கும் அழுக்கை சாதாரணமாக துடைக்க முடியாது. அதற்கு பிரஷ் மூலம் இடுக்குகளில் உள்ள அழுக்கை தேய்த்தால் அழுக்கு நீங்கிவிடும்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
வீட்டில் கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
🏮 பொதுவாக நகரங்களில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருக்கும் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும்.
🏮 சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும் போது, சமையல் கேஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
🏮 வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்மந்தமான அடுப்புகளை வைத்து பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
🏮 சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க் குமிழ் உருவாகும். இதைக் கொண்டு எரிவாயு கசிவை பரிசோதிக்க வேண்டும். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.
🏮 நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.
சிலிண்டர்களை நல்ல முறையில் உபயோகப்படுத்த சில குறிப்புகள்
🏮 சமைக்கும் போது, அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விட்டால் சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இதனால் கேஸ் கசிவு உண்டாகும்.
🏮 பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கேஸ் கசிவு இருக்கும் போது விபத்தை உண்டாக்கக் கூடும்.
🏮 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
🏮 கேஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.
🏮 காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும். எரியும் நெருப்பு, எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேஸ் கசிவு ஏற்படுவதை சரிசெய்து கொள்ளுங்கள்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai