சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்
Sep 19 2025
56

திருச்சி, செப். 20-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் செப்.22-ம் தேதி தொடங்குகிறது.
விழாவையொட்டி, கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபம் அருகே பல அடுக்குகள் கொண்ட நவராத்திரி கொலு வைக்கப்பட உள்ளது. 22-ம் தேதி இரவு அம்மன் குமாரிகா (துர்க்கை) அலங்காரத்திலும், 23-ம் தேதி திருமூர்த்தி அலங்காரத்திலும், 24-ம் தேதி கல்யாணி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார்.
இதேபோல, 28-ம் தேதி சாம்பவி அலங்காரத்திலும், 29-ம் தேதி துர்க்கை அலங்காரத்திலும், 30-ம் தேதி சுபத்ரா அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார். 1-ம் தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோயில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும்.
இதேபோல, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா வரும் 22-ம் தேதி தொடங்கி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1-ம் தேதி அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் பிச்சைமணி, ராஜசுகந்தி, லட்சுமணன், மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?