சிந்தனை மாற்றமே தேவை” - ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!
சென்னை: “பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை” என ஆளுநர் மாளிகைகள் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் (மக்கள் பவன்) என்று அழைக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதாவது, 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், ‘மக்கள் மாளிகை’ எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை. சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?