திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகம் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில். தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காரைக்காலில் 19 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 17 செமீ, நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் தலா 15 செமீ, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தலா 14 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தொண்டி, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் 13 செமீ, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கண்ணி, வேதாரண்யத்தில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?