வானந்த வெளியில் பஞ்ச பூதமாய்
ஆவிர்பவிக்கும், அஞ்செழுத்தன்!
வேய்குழலின் இசைபோல்,
உயிர்வளியில் ஒன்றாய்;
ககன காற்றிலே ஓசையாகவும் விரைவாக இரண்டாகவும்:
ஓங்கு தீயிலே,
ஒளி, ஒலி, மற்றும் விசையாக மூன்றாகியும்:
நீரிலே, நாதம், ஒளி, துள்ளுதலாகவும், வெப்பமாய் நான்காகவும்:
அமைந்த மண்ணிலே, காற்று, நாதம், தீ, நீர்,மண் என ஐந்தாகவும்:
மறைந்திருக்கும்
மந்தணம் அறிய;
விலகும்
சிதம்பர சிற்பர ரகசியம்.
அறிய அறிவன் அவன் !
அரிய அரியவன் அவனின்;
நுட்பத்தை யாரே அறிய வல்லார்

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%