சீனா மீதான 100% வரி கைவிடப்படுகிறது : சீனா - அமெரிக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பூசான்,நவ.01- தென்கொரியாவின் பூசான் நகரில் அக்டோ பர் 30 வியாழக்கிழமையன்று அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்தித்து இரு நாட்டு வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பொருளா தார மற்றும் வர்த்தகக் குழுக்கள் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்வு காண்ப தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன. இரு நாட்டு தலைவர்களும் பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், மேலும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள், சிப் உற்பத்தி, போர் விமா னங்கள் நிறுவனங்களுக்கு தேவையான அரிய மண் காந்தங்கள் (கனிமங்கள்) மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக பேச்சுவார்த்தையில் சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கச் சோயாபீன்ஸ்களை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவும் சீனப் பொருட்கள் மீது விதிக்கவிருந்த 100 சதவீத வரியை கைவிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்து சிப்கள் சீனாவிற்கு ஏற்றுமதி ஆகும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், பென்டனைல் (Fentanyl) மருத்துகள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. அதனை சீனா தடுக்க வேண்டும் என அமெரிக்கா குற்றம்சாட்டி சீனா மீது 20 சதவீத வரிகளை விதித்திருந்தது. அந்த வரியை 10 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின்படி சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி 47 சதவிகிதமாக இருக்கும். அதேபோல அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் வரி 32 சத விகிதமாக இருக்கும்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?